அயல் நாட்டில் வேலை வாய்ப்பு

அயல் நாட்டில் வேலை வாய்ப்பு என்பது இன்றைய பொருளாதார சூழலில் (உலக மயமாக்கல், தாராளமயமாக்கல்) எட்டுகின்ற கணித எண். படித்து முடித்த ஒவ்வொரு இளைஞரும் யுவதியும், முதலில் முயற்சிப்பது அயல்நாட்டு வேலைக்கு தான். அயல் நாட்டில் வேலை என்பது வருமானத்துடன் கெளரவத்தையும் வழங்குகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மனித சக்தியை நம்பி தான் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் இயங்குகின்றன. உலகம் ஒரு கிராமமாக மாறிவரும் இன்றைய சூழலில், தொழில் நுட்ப அறிவு, மற்றும் அறிவியல் அறிவு ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் மிகவும் தேவைப்படுகிறது. எனவே மனித சக்தி மட்டுமில்லாமல் தொழில்நுட்ப அறிவும் ஏராளமாக உள்ள இநஙதியா போன்ற நாடுகளின் தேவை அதிகரித்துள்ளது.

இத்தகைய அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகிவர மிகவும் முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்ப புரட்சி என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தகைய தகவல் தொழில்நுட்ப புரட்சி அயல்நாட்டு வேலை வாய்ப்பினை உருவாக்குவதுடன் தாய்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடிதளமாக அமைகின்றது.

உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மூலம் ஒவ்வொரு நாடும், மிகுந்த போட்டியினை சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு நிறுவவனமும், புதிய புதிய யுக்திகளை கையாண்டு தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஆதலால் ஒவ்வொரு நாடும் தங்கள் முக்கிய துறையான நிதி நிர்வாகம் மற்றும் பொது விநியோகம் போன்ற துறைகளில் கணினி மயமாக்கி வருகின்றன. இதன் மூலம் அயல் நாட்டில் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது.

மகாத்மா காந்தியின் பொன்வரிகளான "வாடிக்கையாளர்கள் தான் எஜமானர்கள்" என்ற அடிப்படையில், ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களை கவருமட் விதமாக, புதிய புதிய முறைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அறித்து வருகின்றது.

இதன் அடிப்படையில் வாடிக்கையாளர் "அழைப்பு சேவை" என்ற புதிய பரிமாணத்தில் சேவை செய்ய தொடங்கியுள்ளது இதன் சேவை, வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகிளல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அயல்நாட்டு வேலை வாய்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது-

உலக மொழியாம் ஆங்கிலத்தை மிகவும் திறமையாகவும், சிறந்த முறையில் பயன்படுத்துவதும் நாம் தான். இதுவும் அயல்நாட்டு வேலை வாய்ப்பினை நமக்கு உருவாக்குகின்றன. மேலும் இந்திய கல்வி, கலாச்சாரம் போன்றவையும், வேலை வாய்ப்பினை பெருக்கி வருகிறது.

எனவே இந்த சூழலில் அயல்நாட்டு வேலை வாய்ப்பினை பெற்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவோம். இந்தியாவை வல்லரசு நாடாக்குவோம்! அப்துல் கலாம் கனவினை நனவாக்குவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்