விஷ்ணுகிராந்தியை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும்.
குறிப்பாக, விஷக்காய்ச்சலுக்கு விஷ்ணுகிராந்தி இலையைப் பயன்பத்தி இருக்கிறார்கள். விஷ்ணுகிராந்தி, நிலவேம்பு, பற்பாடகம், சீந்தில் கொடி ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மிளகு கிராம்புத்தூள் கலந்து வயிறு காலியாக இருக்கும் போது மூன்று வேளை குடித்தால், 5 நாட்களில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம். பக்கவிளைவு எதுவும் கிடையாது என்கிறது, சித்தமருத்துவம்.
அதே நேரம் டெங்கு முழுமையாக தாக்கும் போது விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அல்லது சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். தினமும் மூன்று வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி ஓடும் என்கிறார்கள், தென்னிந்திய சித்தமருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்.