முகத்தில் உண்டாகும் பருக்களை போக்கும் வெட்டிவேர்...!!

Webdunia
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர், ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கிய கடுக்காய், இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள்.


மறுநாள்  இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.
 
ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள்.  முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே  முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமானவெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இருமுறை இப்படிச்  செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
 
பச்சைப் பயறு 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் 50 கிராம் இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.
 
வெட்டிவேர் 100 கிராம், வெந்தயம் 100 கிராம் இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொண்டு, எண்ணெய் தேய்த்து குளிக்கும்  போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்தி வந்தால், முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே  மணக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்