எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட வசம்பு !!

சனி, 10 செப்டம்பர் 2022 (13:06 IST)
இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலன் தருகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருப்பவர்கள் வசம்பு மற்றும் அதிமதுரம் இரண்டையும் பொடியாக்கி சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வந்தால் இருமல் வேகமாக குணமடையும்.


வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுதல் அல்லது படுக்கையை சுற்றி தூவி விடுவதால் தொற்று கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.

வாகனங்களில் பயணம் செய்யும் போதும், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதாலும் சிலருக்கு வாந்தி குமட்டல் போன்றவை ஏற்படுகிறது. அந்த சமையங்களில் இவர்கள் வசம்பை நன்கு பொடியாக்கி வாயில் போட்டு சிறிதளவு இதமான வெண்ணீரை குடித்தால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவை குணமாக வசம்பு, அதிவிடயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி இதில் 1 கிராம் அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வசம்பை நன்றாக நசுக்கி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சூடு ஆறிய பின்பு குடித்து வந்தால் வாயு கோளாறுகள், பூச்சி தொல்லைகள், உப்பசம் மற்றும் அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்