பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏ-வைப் பாதுகாக்கும். முட்டைக்கோஸ் மற்றும் பசலைக்கீரையில் வைட்டமின் கே, சி மற்றும் இரும்பு சச்து நிறைந்துள்ளது.
தினமும் சிறிது தேங்காய் துண்டை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்களை கரைத்து குறைத்து, மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.