நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள். கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.
ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.
நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.