தோல்நோய்களுக்கு அற்புத குணம் தரும் கீழாநெல்லி!

மஞ்சள் காமாலையை குணப்படுத்த கூடியதும், சிறுநீர்தாரை எரிச்சலை சரிசெய்ய கூடிய தன்மை கொண்டதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான கீழாநெல்லியின் நன்மைகள் குறித்து காணலாம்.அற்புத மருத்துவ குணங்களை கொண்டது கீழாநெல்லி.
கீழாநெல்லியை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, மோர்.

செய்முறை: கீழாநெல்லியை அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து உப்பில்லாத மோரில் சேர்த்து கலக்கவும்.
 
கீழாநெல்லி இலைகளின் கீழ் காய்களை கொத்தாக பெற்றுள்ளது. மிகுந்த கசப்பு உடையது. ஈரல் நோய்களை குணப்படுத்துகிறது. கல்லீரல், மண்ணீரலுக்கு மருந்தாகிறது. தோல்நோய்களை போக்கும் தன்மை உடையது. தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும். பித்தத்தை  போக்கும். வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கிறது.
 
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மஞ்சள் காமாலை சரியாகும். இந்த சமயத்தில், மஞ்சள் காமாலைக்கான பத்திய  உணவு எடுக்கவும். வெள்ளைப்படுதல், சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, பால்.  செய்முறை: 50 மில்லி பாலுடன், கீழாநெல்லி இலைசாறு 10 முதல் 20 மில்லி சேர்த்து கலந்து காலை, மாலை குடித்துவர வெள்ளைப்படுதல்  சரியாகும். உடல் பலவீனம் சரியாகும். உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சி தருகிறது.
 
சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள்  காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை  சரிசெய்யும் மருந்தாகிறது. கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. கீழாநெல்லியின் வேர் 10 கிராம் அளவுக்கு எடுத்து  நசுக்கி பால் அல்லது மோரில் கலந்து குடிக்கும்போது ஈரல் நோய்கள் சரியாகும்.
 
எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.பார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன்  சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்