உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ஓட்ஸ் !!

செவ்வாய், 22 மார்ச் 2022 (13:46 IST)
ஓட்ஸ் உடலில் சர்க்கரையை உறிஞ்சப் படுவதை குறைக்கிறது. ஓட்ஸில் உள்ள சிக்கலான மாவுச் சத்தின் காரணமாக சர்க்கரை விரைவாக உடைக்கப் படுவதை குறைக்கிறது.


ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் உணவின் அளவைக் குறைக்கிறது. மேலும் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை கொண்டுள்ளது. இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.

உடல் எடை குறைய விரும்புபவர்கள் ஓட்ஸ் உடன், பழங்களைச் சேர்த்து கொள்ளலாம். நோயெதிர்ப்பு அமைப்பு என்பது பாக்டீரியா, வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிரான உடலின் முக்கிய பாதுகாப்பு ஆகும்.

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அவை செரிமானத்திற்கு சிறந்தவை. நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமான அமைப்பை சீராகவும் திறமையாகவும் இயங்க வைக்கிறது.

வாயு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. ஓட்ஸ் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகள் அடைப்பு, இருதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும.

திட உணவை சாப்பிடத் தொடங்கிய குழந்தைகளுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். ஓட்ஸ் மிகவும் சத்தானது மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்