கல்யாண முருங்கையின் பூ கர்ப்ப நோய்களுக்கு சிறந்த மருந்து. சுவாசகாசம் என்னும் மூச்சிரைப்பு நோய் அதிகரிக்கும்போது அரிசிக்கஞ்சியில், பூண்டை வேகவைத்து அதில் 30 மி.லி கல்யாண முருங்கை சாறு கலந்து சாப்பிட்டால் கபம் வெளியேறி மூச்சிரைப்பு கட்டுப்படும்.
கல்யாண முருங்கை இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு முள்முருங்கை இலைசாற்றை 50 மி.லி எடுத்து, மாதவிலக்கு ஆரம்பிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து தினமும் பருகவேண்டும். வலி கட்டுப்படும். இந்த சாற்றில் 10 மி.லி. எடுத்து, வெந்நீர் கலந்து பருகினால் கபம், இருமல் நீங்கும்.
பத்து இலைகளை நறுக்கி, 50 கிராம் சிறிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி பிரசவமான தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும்.