அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் பலாப்பழம் !!

பலாப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது. அதாவது வயது முதிர்வை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.
 
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.
 
பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது. பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கும். இதை தொடர்ந்து 6 வாரங்களுக்கு மேல் செய்து வந்தால் சிறப்பான பலன் உண்டு.
 
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. 
 
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும். 
 
ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் பலாப்பழம் பேருதவி புரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்