மாவிலங்கம்: இலையை அரைத்துப் பற்று போட அனைத்து வீக்கங்களும் கரையும். பட்டை 1 பங்கு, பூண்டு அரை பங்கு; மிளகு கால் பங்கு அரைத்துக் கொட்டை பாக்களவு காலை வெறும் வயிற்றில் கொடுத்து வர முடக்கு வாதம் நீங்கும்.
மூக்கிரட்டை: இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம். இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.
மலைவேம்பு: 10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும். மலைவேம்பாதித் தைலம் கடைகளில் கிடைக்கும்.