இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா சாம்பல் பூசணி !!

பூசணிக்காயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மஞ்சள் பூசணி, மற்றோன்று சாம்பல் பூசணி. இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. சாம்பல் பூசணியில் உள்ள அதிகளவு பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. 

சாம்பல் பூசணியானது 96 சதவீத நீர்ச்சத்து கொண்டது. சாம்பல் பூசணி உடல் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை  நிலைநிறுத்தும் ஒரு அற்புத காய்கறியாக சாம்பல் பூசணி குறிப்பிடபடுகிறது.
 
சாம்பல் பூணிக்கு உடலைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
 
சாம்பல் பூசணியானது வலிப்பு நோய்களை குணமாக்குகிறது. வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மற்றும் மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது.
 
சாம்பல் பூசணியானது ஆஸ்துமா, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் பாதுகாக்கிறது. பார்வைத் திறன் மேம்படவும் சாம்பல் பூசணி உதவுகிறது.
 
நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் சாம்பல் பூசணியில் அதிகளவு உள்ளது.
 
நாடாப்புழுக்களை வெளியேற்றும் புழுக்கொல்லியாகவும் சாம்பல் பூசணி காய்கள் பயன்படுகிறது. மேலும் உடல் சூடு, எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலிய  பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது சாம்பல் பூசணி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்