இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் உலர் அத்திப்பழம் !!

Webdunia
தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இந்த இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

அத்திப்பழம் எளிதில் ஜீரணமாகும். மேலும் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். மற்ற பழங்களில் உள்ள சத்துக்களை விட அத்திப்பழத்தில் நான்கு மடங்கு கிடைக்கிறது.
 
தினமும் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் அது நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் உள்ளது. இது நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தீயன கால்சியத்தின் அளவாகும். எனவே இது எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.
 
அத்திப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் மற்ற பழங்களை இந்த அத்திபழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் இந்த அத்திப்பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.மேலும் நம் உடலுக்கு ஆற்றலும் தரும்.
 
அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. மேலும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
 
அத்தி பழத்தை தினமும் சாப்பிடுவத்தல் இரத்தஓட்டம் சீராகும். உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். அத்தி பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்