பல நோய்களுக்கு எளிதாக நிவாரணம் தரும் முருங்கைக்காய் !!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (17:52 IST)
முருங்கைக்காய்க்கு பல நோய்களை எளிதாக குணபடுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு ஆரோக்கியமும் உற்சாகம் கிடைக்கும்.


பித்தக்கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

இதயம், ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்தை சிறப்பாக இயங்கவைக்கும், குறிப்பாக பிஞ்சு முருங்கைக்காயில் அதிக அளவில் சத்துக்களும் நன்மைகளும் உள்ளது.

முருங்கைப் பூவை சுத்தம் செய்து, அதே அளவு பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்கு பலம் ஏற்படும்.

முருங்கைக்காயில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை போதிய அளவில் உள்ளன. 100 கிராம் முருங்கையில் 26 கலோரி இருக்கிறது.

முருங்கைக்காயின் சாற்றை எடுத்து, அதனை பாலில் கலந்து குடித்து வந்தால், குழந்தைகளுக்கு எலும்புகள் வலிமை பெறும். உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக, முருங்கைக்காயை நாம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

இருமல், தொண்டை வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள், முருங்கைக்காயை சூப் செய்து பருகலாம். இவ்வாறு செய்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்