சரும ஒவ்வாமைக்கு வைட்டமின் சி குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைவு, காஸ்மெடிக் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், அதிக வாசனையுடைய பவுடர், மசாலா உணவுகள் என எண்ணிலடங்காத காரணிகள் தேமல் உண்டாகிறது.
இவ்வகைகாரணிகளுடன் வெளியிடங்களுக்குப் போகும்போது, புறஊதாக் கதிர்களை தன்பால் ஈர்த்துக்கொள்ளும்போது தோல் ஆங்காங்கே சிவந்து போவது, முதுகு பகுதியில் புள்ளிப்புள்ளியாகத் தோன்றுவது, தோலில் வெள்ளை நிறத்தில் தேமல் போன்று தோன்றி அரிப்பை ஏற்படுத்தும்.
தினமும் இருவேளை குளிக்க வேண்டும். கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் இருக்குமிடத்தில் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வந்தால் விரைவில் கருந்தேமல் மறையும். அதிக அறிகுறிகள் அலது பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகி, அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் வேண்டும்.