வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில் ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால் குறையும்.
தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம் கொண்டது வெங்காயம்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.