தேங்காயில் உயர் ரகப் புரதம், அமினோ அமிலங்கள், அதிக அளவில் பொட்டாசியம், சோடியம், மெக்னிசியம், பாஸ்பரஸ், கந்தகம், அயம், சுதையம் முதலியவை உள்ளன. உயிர்ச் சத்து B அதிக அளவிலும் A சிறிதும் இருக்கிறது.
தேங்காய் பால் குளிர்ச்சி ஊட்டல், ஊட்டம் தருதல், மலமிளகுதல், நீர் பிரிதல், போன்ற நலன்களை உண்டாக்கியது.
எலுபுறுக்கி நோயினால் பலவீனம் உள்ளவர்கள், நாள்தோறும் நான்கு முதல் 8 அவுன்ஸ் தேங்காய் பால் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிட்டும். தேங்காய் பால் காய்ச்சல் தணிக்கவும், தாகத்தைப் போக்கவும் பயன்படுகிறது.
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.