அடிக்கடி மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்...!!

Webdunia
வாய்ப்புண் உள்ளவர்கள் மனத்தகாளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.
மலச்சிக்கல் அவஸ்தைப் படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வெறும் பச்சை இலைகளை நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.
 
கல்லீரல் பிரச்சனைகள் மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண  மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும்.
 
சரும அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால்  விரைவில் குணமாகும்.
 
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கும். கை, கால் வலி, காய்ச்சல் வந்தால், அதனை போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.
 
உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும். காசநோய் உல்ளவர்கல் இந்த  கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.
 
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன் செரிமான  பிரச்சனையும் நீங்கிவிடும்.
 
மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிபடுபவர்கள், மணத்தக்காலி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம்  கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தாளிக் காயை வர்றல் செய்து குழம்புக்கும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்