பெருஞ்சீரகத்திற்கு ஆயுர்வேத்தில் மகத்துவமான இடத்தை பிடித்துள்ளது. இயற்கை முறையில் உடல் எடையை குறைக்க பெருஞ்சீரகம் உதவுகிறது.
தினமும் வெந்நீரில் இந்த சீரகம் சேர்த்து அல்லது பொடியாக்கி நீரில் கலந்து குடிந்து வந்தால் தேவையில்லாத கொழுப்பு கரையும்.
தலைவலி மற்றும் மூக்கு அடைப்பு போன்ற பிரச்சனைகள் மழை மற்று குளிர்காலத்தில் அதிகமாக அனைவருக்கும் காணப்படும். இந்த பிரச்சனை வரும் போது, அதிகாலையில் மற்றும் இரவு தூங்கும் நேரத்தில் சீரக எண்ணெய் நெற்றி, தலை, மூக்கு, நெஞ்சு ஆகிய இடங்களில் தேய்ப்பதன் மூலம் இப்பிரச்சனை குணமாகும்.
கலப்படம் உணவு சாப்பிடுவதால் நம் உடலில் ரசாயனங்கள் அதிகமாக சேர்கிறது. இந்த ரசாயனங்கள் நுரையீரல் மற்றும் இரத்தத்தில் சேர்க்கிறது. இப்பிரச்சனை வராமக் இருக்க பெருஞ்சீரகம் சிறந்த மருந்தாக இருந்து வருகிறது. பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரித்து, ரசாயன கழிவுகளை உடலில் இருந்து வெளியே அகற்றுகிறது.
பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டும். கொட்டாமல் இருக்க பெருஞ்சீரக எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கொட்டும் பிரச்சனை நீங்கும். இச்சீரகத்தை பொடியாக்கி பால் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் புண்கள் ஆகியவை மறையும்.
தினமும் உணவில் சேர்த்து கொண்டால் செரிமான சீராக நடைபெறும். மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மேலும் அஜீரண பிரச்சனை நீங்கும். வயிற்றில் பூச்சி தொல்லையால் அதிக அளவு ஊட்டச்சத்துக் குறைப்பாடு காணப்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இப்பிரச்சனையில் இருந்து விடுபட பெருஞ்சீரகத்தினை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.
சில நேரங்களில் ஏற்படும் விக்கல் தண்ணீர் குடித்தாலும் நிக்காது, அதற்கு பெருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் விக்கல் நின்று விடும்.
நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. மேலும் கொழுப்பு சம்பந்தமான பிரச்சனை வராமல் இருக்கு உதவுகிறது. வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரை விட பெருஞ்சீரகம் நல்மருந்தாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் வியாதி வர வாய்ப்பு குறைவு.