அவரைக்காயில் உள்ள வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என பல சத்துக்களை உள்ளடக்கியது.
அவரைக்காயில் நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அவரைக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அவரைக்காயில் புரதச்சத்து வளமான அளவில் உள்ளது. இதனால், அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து, உடல் எடை குறைந்து விடுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், இவை நம் உடலில் உள்ள நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.