தூதுவளை கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Webdunia
தூதுவளைக் கீரையில் உள்ள பூ, காய், கொடி அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. முள் இல்லாமல் இதன் இலைகளை பறித்து சிறிது சிறிதாக அரிந்து கொண்டு, சிறு வெங்காயத்தோடு நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் இரைப்பு விலகும்.

இக்கீரையைக் கசாயமாய் காலை மதியம் ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால், வாயு குத்தல் குடைச்சல் நீங்கும். இதன் கொடி சிறிது சிறிதாக வெட்டி, மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து ரசம் வைத்து பருகினால், உடல் வலி காய்ச்சல் தீரும். 
 
டைபாய்டு, நிமோனியா போன்ற கடுமையான காய்ச்சலைக் குணமாக்கும் வல்லமை கொண்டது. மேலும் இது நல்ல ஞாபக சக்தியை தரும்.
 
தூதுவளைக் கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். 
 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். குழந்தைகளின் கக்குவான் இருமல் தணிக்கும். சளியை ஒழிக்கும். காது சம்பந்தமான வியாதிகள் குணமாகும்
அஜீரணத்தை போக்கும்.
 
அனைத்து வயதினரும் தொடர்ந்து தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடையும். இது மூளையில் இருக்கும் செல்களை தூண்டி நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்