கற்றாழை கத்தளை, சோற்றுக் கற்றாழை, சிறுகத்தளை, குமாரி, கன்னி என பல பெயர்களில் அழைக்கபடுகிறது. கற்றாழையின் இலை, வேர் ஆகியவை மருத்துவ குணமுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என பல வகைகள் உள்ளன.
கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.