இந்த விஷயம் ராஜேஷுக்கு தெரியவந்ததை அடுத்து, பல முறை ஜமீலாவை கண்டித்துள்ளார். ஆனாலும், ஜமீலாவை தொடர்பை கைவிடவில்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று ராஜேஷ் கானுக்கும், ஜமீலாவுக்கும் வாக்குவாதாம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த ராஜேஷ்கான் ஜமீலாவை சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இது குறித்து அவரது நண்பர் சபிபுல்லா காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையில் ராஜேஷ் கான் தலைமறைவு ஆகியுள்ளார். பின்னர், அவரது செல்போன் சிக்னலை வைத்து ஹவுராவில் இருந்து அவரது சொந்த ஊருக்கு செல்லும் ராஜேஷ்கானை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.