சமீபத்தில் மத்திய அரசு சீன நாட்டு செயலிகள் 106 க்கு இந்தியாவில் தடை விதித்தது. அதில் கேம் ஸ்கேனர் என்ற செயலியும் ஒன்று. இந்நிலையில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் வலைத்தளத்தை கையாளும் அதிகாரிகள், இந்த கேம் ஸ்கேனரைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை அந்த ஆப்பை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கண்டறிந்து வேறொரு செயலி மூலமாக ஸ்கேன் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக கொரோனா அச்சத்தால் நீதிமன்றங்கள் ஆன்லைனில் நடப்பதால் பதிவு, ஆவணங்கள் மற்றும் உத்தரவுகள் அனைத்தும் ஸ்கேன் செய்தே அனுப்பப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.