கணவனை செங்கலால் அடித்து கொலை செய்த மனைவி: அதிர்ச்சி காரணம்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:19 IST)
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய காரணத்தால் கணவனை செங்கலால் அடித்து கொலை செய்த மனைவியால் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிய நிலையில் வரதட்சணை கேட்டு அவரது கணவன் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
 
இதனால்கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ள நிலையில் நேற்று கொடுமைப்படுத்திய கணவனை ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த மனைவி செங்கலால் அடித்தே கொன்றுள்ளார்
 
 கணவனின் தலையில் செங்கல்லால் அடித்ததாகவும், இதனால் படுகாயம் அடைந்த அவரது கணவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது
 
இதனையடுத்து மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்து தான் கணவனை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
வரதட்சணை கொடுமையால் கணவனை கொலை செய்த மனைவியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்