இந்நிலையில் இதுவரை வீரமரணம் அடைந்தவர்களை இந்திய ராணுவ வீரர்கள் என்று தான் ஊடகங்களும் மற்றவர்களும் குறிப்பிட்டு வரும் நிலையில் உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 'உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தென் இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்திகள் வருகிறதே, என்றாவது குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்தி வந்துள்ளதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.