தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ் திரைப்படங்களுக்கு தடை, தமிழக பேருந்துகள் செல்ல அனுமதியில்லை, தமிழ் சேனல்களுக்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தமிழர் விரோத போக்கை கடைபிடித்து வரும் கன்னடர்கள் தமிழர்களை தாக்குவோம் எனவும் மிரட்டல் விடுத்தனர்.
இதுவரை 2,000 மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கர்நாடகா, கன்னட விவகாரங்களுக்காக சுமார் 10,000க்கும் அதிகமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
இன்று இவர் நடத்திய போராட்டத்தில் தமிழர்களுக்கு எங்கள் சிறுநீரை தருகிறோம், ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று தன்னுடைய சாக்கடையான வார்த்தைகளை கூறி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்துள்ளார். இதனை கன்னட மக்கள் கூட ரசிக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக கன்னட மக்களை தூண்டி விடுவது இது போன்ற அரசியல் வியாதிகள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.