சொந்த மகள்களை சீரழித்த 2வது கணவர்; உடந்தையாக இருந்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (12:42 IST)
ஆந்திராவில் இரண்டாவது கணவரின் ஆசைக்காக சொந்த மகள்களின் வாழ்க்கையை தாயே சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள வட்லூரை சேர்ந்த 30 வயது பெண்மணிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் கணவர் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகள் முன்னர் இறந்துவிட்டார்.

அதன்பிறகு அந்த பெண்மணி அவரது உறவினரான சதீஷ்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டாவது கணவரான சதீஷ்குமார் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என அந்த பெண்ணிடம் கேட்டு வந்துள்ளார், ஆனால் குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டதால் அதற்கு வாய்ப்பில்லை என அந்த பெண் மறுக்கவே, சதீஷ்குமார் வேறு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதனால் தனது முதல் மகள் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சொல்லி சதீஷ்குமாரை சமாதானம் செய்த அந்த பெண்மணி தனது முதல் மகளை சதீஷ்குமாருக்கு தாரை வார்த்துள்ளார். சதீஷ்குமாரின் பாலியல் வன்கொடுமையால் கருத்தரிந்த முதல் மகள் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஆனால் தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென கூறி பெண்மணியின் இரண்டாவது மகளையும் வன்கொடுமை செய்துள்ளார் சதீஷ்குமார். இதில் கருத்தரித்த இரண்டாவது மகளுக்கு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த விசாகப்பட்டிணம் காவல்துறையினர் இளம்பெண்களை சீரழித்த சதீஷ்குமாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த இளம்பெண்களின் தாயையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்