2009ஆம் ஆண்டு முதல் டெல்லியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் (GPS) கருவியைப் பொறுத்துவது கட்டயாமாக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த விதிமுறை அமலானது.ஆனால் டெல்லியில் உள்ள அனைத்து பொது சேவை வாகனங்களிலும் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் - ஆட்டோக்கள், டாக்சிகள், பேருந்து மற்றும் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் (GPS- Global Positioning System) சாதனங்கள் பொருத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போக்குவரத்துத்துறை ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பின்னர், ஒழுங்கான ஜிபிஎஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கவும் முடிவுசெய்துள்ளது.