தேசியக்கொடி வாங்கினால் தான் ரேசன் பொருட்களா? பாஜக எம்பி கண்டனம்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:29 IST)
ரேஷன் கடையில் 20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கூறப்படுவது கண்டனத்துக்குரியது என பாஜக எம்பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ரேசன் கடையில் தேசியக்கொடியை வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒருவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த வீடியோ வைரலானதை எடுத்து பாஜக எம்பி வருண்காந்தி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
ரேஷன் கார்டுதாரர்கள் தேசியக் கொடியை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் தேசியக்கொடியை வாங்க கட்டாயப்படுத்துவது கொடுமையானது என்றும் பதிவு செய்துள்ளார் அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்