பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய கொடூரம்!

செவ்வாய், 4 ஜூலை 2023 (21:46 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில்  பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த கொடூரம் சம்பவம் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தின இந்தக் கொடூர சம்பவம் பற்றி போலீஸில் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பாஜக எம்.எல்.ஏவின் பிரதி நதி என்பதால் அவர்கள் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம்: பிரவேஷ் சுக்லா என்ற பாஜக தலைவர் பழங்குடியின ஏழையின் மீது சிறுநீர் கழிக்கிறார் பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா பிரதிநிதியாக இருப்பதாக கூறப்படுகிறது@MPPoliceDeptt@Uppolice@ChouhanShivraj@OfficeOfKNath@digvijaya_28 pic.twitter.com/C7LIO3udIb

— UP Model/பெண்கள் பாதுகாப்பு உபி மாடல் (@UPModel2022) July 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்