இந்நிலையில் கொரோனாவால் புதிதாக 1,84,372 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்தது. புதிதாக 1027 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்தது.
இதனிடையே, உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அகிலேஷ் யாதவை தொடர்ந்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.