விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்தவரிடம் திருடிய கும்பல்.. பெங்களூரில் நடந்த கொடூரம்..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (17:27 IST)
விபத்தில் சிக்கிய படுகாயம் அடைந்து சுயநினைவு இழந்தவரிடம் மனிதாபமானம் இன்றி திருடிய கும்பலை பெங்களூர் போலீசார் தேடி வருகின்றனர். 
 
பெங்களூரில் நேற்று நள்ளிரவில் அருண் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி நடுரோட்டில் சுயநினைவு இழந்தார். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கும்பல் ஒன்று அருணின் இருசக்கர வாகனம் செல்போன் வெள்ளி சங்கிலி அவரிடம் இருந்த பணம் ஆகியவற்றை திருடி சென்றதாக தெரிகிறது. 
 
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாமல் விபத்தில் சிக்கியவரின் பொருள்களை திருடியவர்கள் குறித்து அருணனின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
 
மனிதாபி மற்ற இந்த செயல் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை பெங்களூர் போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் குற்றவாளிகளை விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்