மும்பை தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமானவர் நடிகை அமன் சந்த்( வயது 27). பல தொடர்களில் நடித்து வரும் இவரை திரைப்பட உதவி இயக்குனர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது தான் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க வைக்க விரும்புவதாகவும், அதனால் நேரில் சந்திக்குமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து நடிகை அமன் சந்த் உதவி இயக்குனர் தீபக்மிஸ்ராவை காப்பி ஷாப் ஒன்றில் சந்தித்து பேசினார். அப்போது தீபக் மிஸ்ரா நடிகை அமன் சந்திடம், நாங்கள் இயக்கும் அடுத்தப்படத்தில் உங்களுக்கு வாய்ப்பு வழங்குவதாகவும், அதற்காக நீங்கள் என்னுடனும், இயக்குனருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறியதாக தெரிகிறது.