இன்றும் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

வியாழன், 17 மார்ச் 2022 (10:40 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிவில் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது 
 
நேற்று சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஆயிரம் புள்ளிகளை தாண்டி உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையில் இன்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 57 ஆயிரத்து 840 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 260 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்