திருப்பதி தரிசனம் தொடங்கப்படுகிறதா? – அதிகாரிகள் ஆலோசனை!

Webdunia
சனி, 9 மே 2020 (13:04 IST)
மே 17 உடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதற்கு பிறகு திருப்பதி தரிசனம் தொடங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. கடந்த மார்ச் 20ம் தேதி முதல் திருப்பதி தேவஸ்தானமும் மூடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு உள்ள நிலையில் அதற்கு பிறகு திருப்பதி தரிசனம் தொடங்கப்படும் நிலையில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா தாக்கத்தால் சமூக இடைவெளி மிகுந்த அவசியமாகியுள்ளது. இதனால் திருப்பதியில் முன்பு போல கூட்டமாக மக்களை உள்ளே அனுப்ப முடியாது. இந்த சிக்கல்களை தீர்ப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம், திருப்பதியின் அலிபிரி சோதனைச்சாவடி பகுதியில் கிருமி நாசினி சுரங்கங்கள் அமைக்கப்படும் பணியும் தொடர்ந்து வருகிறது.

மேற்கண்ட நடவடிக்கைகளால மே 18 முதல் திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக பக்தர்கள் காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்