போட்டியிடாத கட்சிக்கு 2.9% ஓட்டு: இதுதான் எக்சிட்போல் லட்சணமா?

Webdunia
திங்கள், 20 மே 2019 (13:18 IST)
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பான எக்சிட்போல் என்பது ஒரு சூதாட்டமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான கோடிகள் இந்த சூதாட்டத்தில் புழங்கியதாக கூறப்படுகிறது. தேசிய ஊடகங்களும், மாநில ஊடகங்களும் டி.ஆர்.பிக்காக இஷ்டத்திற்கு எக்சிட்போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு எக்சிட்போல் முடிவுகளும் துல்லியமாக இருந்ததில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு
 
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் போட்டியிடாத ஒரு கட்சி 2.9% ஓட்டு வாங்கும் என எக்சிட்போல் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதாவது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில் ஹரியானாவில் மட்டும் கூட்டணியாகவும் மற்ற மூன்று மாநிலங்களில் தனித்தும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.
 
ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தின் எக்சிட்போல் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 38.81% வாக்குகளும், பாஜகவுக்கு 51.6% வாக்குகளும், பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு 2.03% வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 2.9% வாக்குகளும் மற்றவர்களுக்கு 4.66% வாக்குகளும் கிடைத்துள்ளதாக டைம்ஸ் நவ் கணித்துள்ளது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவே இல்லை. பின்னர் எப்படி 2.9% கிடைத்தது என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த லட்சணத்தில்தான் மற்ற எக்சிட்போல் முடிவுகளும் இருக்கும் என்றும் சரியான முடிவுக்கு இன்னும் மூன்று நாள் காத்திருப்போம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்