ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்பு...!

செவ்வாய், 2 ஜனவரி 2024 (13:02 IST)
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தில் திங்கள் கிழமை விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி சுமார் 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதை அடுத்து சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது
 
இந்நிலையில் சுமார் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  
 
சிறுமியின் தந்தை அப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும், சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறு நீண்ட காலத்திற்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் பின்னர் கைவிடப்பட்டு திறந்து விடப்பட்டதாக  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்