பிணத்துடன் உடலுறவு கொண்ட இளைஞருக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வியாழன், 1 ஜூன் 2023 (16:18 IST)
கர்நாடக மாநிலத்தில் இளம்பெண்  ஒருவரைக் கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட இளைஞருக்கு நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2015 ஆண்டு இளம்பெண் ஒருவரைக் கொலை செய்து, அந்த பிணத்துடன் உடலுறவு கொண்ட ரங்கராஜ் தொடர்பான வழங்கில்  வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெறு வந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள்தண்டனையும், பிணத்துடன் உடல்உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கின் தீர்ப்பில் குற்றவாளி பிணத்துடன் உறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகுமா? அல்லது குறம் இல்லையா சட்டப்படி இறந்த  உடலை மனிதராகக் கருதமுடியாது.

அதனால், இந்திய தண்டனைச் சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாகப் பொருந்தாது. 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. இறந்துபோன ஒருவரின் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும். அல்லது புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் கூறியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்