செய்தி சேனலான Lokshahi-ன் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த மத்திய அரசு!

Sinoj

புதன், 10 ஜனவரி 2024 (13:50 IST)
பிரபல மராத்தி செய்தி சேனலான lokshahi-ன் உரிமத்தை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

பிரபல மராத்தி சேனலான lokshahi –ல் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையா பெண்களுக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, கிரித் சோமையா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் lokshahi சேனலின் ஒளிபரப்பை 3 நாட்கள் வரை திடீரென்று மத்திய அரசு நிறுத்தியது.

இந்த நிலையில், அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது lokshahi சேனலின் உரிமத்தை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மேலும், உரிமம் வழங்குவதில் விண்ணத்தில் முறைகேடுகள் உள்ளதாகக் கூறி சேனலின் ஒளிபரப்பு 30 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்