ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது ஒரு தனியார் பள்ளி. கடந்த வியாழக்கிழமை அன்று தாமதாக பள்ளிக்கு வந்ததாக சில மாணவர்களை ராணி குமாரி மற்றும் அனில் குமார் ஆகிய இரு ஆசிரியர்களும் நிர்வாணப்படுத்தி மூன்று மணிநேரம் வெயிலில் நிற்க வைத்தததாக சமூக வலைதளத்தில் மாணவர்களின் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.