தேவைப்பட்டால் மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் : ராணுவ தளபதி ராவத் அறிவிப்பு

சனி, 15 அக்டோபர் 2016 (11:47 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28–ந்தேதி ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.  


 

 
இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களது 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. ‘சர்ஜிகல்’ தாக்குதல் என்று இதற்கு இந்திய ராணுவம் பெயர் சூட்டியது.  
 
இந்நிலையில், சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அதில் இந்திய ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் பிப்பின் ராவத் கலந்து கொண்டு, சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து விரிவாக கூறினார். மேலும், அந்த தாக்குதல் முற்றிலும் நமது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான தாக்குதல் என்றும், தேவைப்பட்டால் மீண்டும் அதேபோல் ஒரு தாக்குதல் நடத்தப்படும் என அவர் கருத்து தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்