கட்டாய மதமாற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் மதத்தில் சுதந்திரம் இருக்கலாம் ஆனால் கட்டாய மதமாற்றம் சுதந்திரம் இல்லை என்றும் இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்