முதல் கட்டத் தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர், சந்திராபூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சித்தூர், ராம்டெக் மக்களவைத் தொகுதியில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், நக்சல் பாதித்த பகுதியான கட்சிரோலி மலையோர பகுதிகளில் கன்னிவெடி வைக்கப்பட்டுள்ளதா என்று மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். ஆள் இல்லாத ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தினர். நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.