இந்திய டிஜிட்டல் கொள்கைக்கு சம்மதம் சொன்ன டிவிட்டர்

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (12:01 IST)
மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ள டிவிட்டர் சம்மதம் தெரிவித்துள்ளது.

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது.
 
ட்விட்டரை பொறுத்தவரை இந்தியாவின் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ட்விட்டர் இந்தியா தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தாலும் தலைமையிலிருந்து தெளிவான ஒப்புதல் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ள நீண்ட இழுபறிக்குப் பின் டிவிட்டர் சம்மதம் தெரிவித்துள்ளது.
 
புதிய சட்டங்களின்படி இந்தியாவில் எழும் புகார்களை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரையும் டிவிட்டர் நியமித்துள்ளது. மேலும் சில அதிகாரிகளை டிவிட்டர் இன்னும் நியமிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்