அவ்வாறாக லக்னோ விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு தேவையான தளவாடங்கள் ராணுவ வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வாகனத்தில் இருந்து மீரஜ் ரக போர்விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்களை மட்டும் மர்ம கும்பல் திருடியுள்ளது. இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் உத்தர பிரதேச காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.