மனைவியை மீட்டுக் கொடுங்கள் ; இளம் வயது மனைவியை தேடும் 62 வயது நபர்

செவ்வாய், 13 ஜூன் 2017 (16:43 IST)
தன்னுடைய 23 வயது மனைவியை காணவில்லை என, 62 வயது முதியவர் போலீசாரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் வசிப்பவர் சதீஷ் ஆப்தே. அவருக்கு வயது 62. இவர்  கடந்த 2015ம் ஆண்டு 23 வயதுடைய லிசா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அப்போது, அவர் மனைவியுடன் எடுத்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
 
இந்நிலையில், சதீஷ் சமீபத்தில் போலீசாரிடம் ஒரு புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரில் தன்னுடைய மனைவி வீட்டை விட்டு வெளியேறி, குஜராத்தில் உள்ள வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டார். இதற்கு என்னுடைய மைத்துணி மோனிகா என்பவர்தான் காரணம் என அவர் கூறியிருக்கிறார்.
 
இதையடுத்து, மோனிகாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, லிசாவிற்கு சதீஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, லிசா குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 
 
ஆனால், இதை மறுத்துள்ள சதீஷ், அவர்கள் கூறுவது பொய். லிசா என்னை விரும்பியே திருமணம் செய்து கொண்டார். ஆனால், என் மைத்துனி மோனிகாதான் இது அத்தனைக்கும் காரணம். ஏனெனில், அவள் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள். எனவே, திட்டமிட்டு தனது சகோதரியை என்னிடமிருந்து பிரித்து, வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டாள். ஆனால், இப்போதும் லிசாதான் என் மனைவி. நாங்கள் விவாகரத்து பெறவில்லை. எனவே, அவரை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார் அந்த 62 வயது ஆசாமி.

வெப்துனியாவைப் படிக்கவும்