மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக பெரும் சரிவை கண்டு வரும் நிலையில் இன்றும் சரிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது
இன்று காலை மும்பை பங்கு சந்தை தொடங்கியவுடன் 230 புள்ளிகள் சரிவடைந்தது 52630 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிஃப்டி சுமார் 70 புள்ளிகள் வரை குறைந்தது 15 ஆயிரத்து 790 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2 மாதங்களில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து உள்ள முதலீட்டாளர்களுக்கு எப்போது லாபம் கிடைக்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது