8 இந்திய கடற்படை வீரர்கள் விடுதலைக்கு ஷாருக்கான் தான் காரணம்: சுப்பிரமணியன் சுவாமி

Siva

புதன், 14 பிப்ரவரி 2024 (07:12 IST)
கத்தார் நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் பணி செய்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆனால் இந்திய அரசு அதிகாரிகளின் திறமையான பேச்சுவார்த்தை காரணமாக தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இந்தியா திரும்பி உள்ளனர். இதையடுத்து மத்திய அரசை நாடே பாராட்டி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 8 இந்திய கடற்படை வீரர்களின் விடுதலைக்கு நடிகர் ஷாருக்கான் தான் காரணம் என்றும் முதல் கட்டமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கத்தார் அரசு அதிகாரிகளிடம் பேசியதில் உடன்பாடு எட்டவில்லை என்பதால் பிரதமர் மோடி ஷாருக்கானின் உதவியை நாடியதாகவும் ஷாருக்கான் கத்தார் அரசிடம் பேசி கடற்படை அதிகாரிகளை விடுதலை செய்ய உதவியதாகவும் கூறினார்.

ஆனால் ஷாருக்கான் மேலாளர் இதனை மறுத்துள்ளார். 8  இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலையில் ஷாருக்கானின் உதவி எதுவும் இல்லை என்றும் முழுக்க இது இந்திய அரசின் பேச்சு வார்த்தையில் தான் நடந்தது என்றும் கூறியுள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்