மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக்கூடாது என்றும், ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு கடந்த சில வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, 'சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்துள்ளது. எனவே ராமர் பாலத்திற்கு எந்தவித இடையூறும் வராது என்பது உறுதியாகியுள்ளது.